தமிழக முன்னாள் அமைச்சரும் திமுக மூத்த நிர்வாகியுமான ரகுமான் கான் சென்னையில் காலமானார்..

தமிழக முன்னாள் அமைச்சரும் திமுக மூத்த நிர்வாகியுமான ரகுமான் கான்

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் தமிழக அமைச்சருமான ரகுமான்கான் காலமானார். திமுகவின் சிறுபான்மை முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர் ரகுமான்கான். தேனி மாவட்டம் கம்பம்தான் ரகுமான்கான் சொந்த ஊர். அவரது சட்டசபை மற்றும் மேடைபேச்சுகளை ரசிப்பதற்கு என தனி பட்டாளமே இருந்தது.
தமிழக முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் சென்னையில் காலமானார்.திமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ரகுமான்கான்.திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் ரகுமான் கான் பதவி வகித்தவர்.
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் 1977, 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் ரகுமான்கான். 1989-ல் சென்னை பூங்காநகர், 1996-ல் ராம்நாதபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றவர்.

5 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த ரகுமான்கான், 1996-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார். திமுகவின் தலைமை செய்தித் தொடர்பாளராக இருந்தார். தமிழக அரசின் சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழுவின் துணை தலைவராக இருமுறை பதவி வகித்தார்.

திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக இருந்த ரகுமான்கான், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.