தமிழகத்தில் 19 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு..

தமிழகத்தில் 19 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
தமிழகத்தில், திருவள்ளூர், கடலூர், தஞ்சை, தூத்துக்குடி, கோவை, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 19 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
திருச்செந்தூர், திருநின்றவூர், திட்டக்குடி உள்ளிட்ட 19 பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பொன்னேரி, திருநின்றவூர், திட்டக்குடி, வடலூர், அதிராம்பட்டினம், திருச்செந்தூர், கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை, பள்ளப்பட்டி, திருமுருகன்பூண்டி பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோன்று, சிவகங்கை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் 5 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, மானாமதுரை, முசிறி, லால்குடி, இடங்கணசாலை, தாரமங்கலம் பேரூராட்சிகள், நகராட்சிகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

உத்தேச நகராட்சிகளின் வார்டு எல்லைகளை வரையறை செய்து சாதாரண தேர்தல் நடத்தப்படும். மேலும், கும்பகோணம் சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. புதிய மாநகராட்சிக்கான வார்டு எல்லை வரையறை செய்யப்பட்டு சாதாரண தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
புதிய நகராட்சிகள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருச்சி மாவட்டம் முசிறி, லால்குடி, சேலம் மாவட்டம் தாரமங்கலம், இடங்கனசாலை, கடலூர் மாவட்டம் திட்டக்குடி, வடலூர், கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு கரூர் மாவட்டம் புகலூர், பள்ளப்பட்டி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, திருநின்றவூர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ஆகிய 19 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.