முக்கிய செய்திகள்

தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..


தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரையிலும் போலியோ எதிர்ப்பு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த போலியோ தடுப்பு மருந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி, பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜனவரி மாதம் முதல் கட்டமாக வழங்கப்பட்ட நிலையில், இரண்டாவது கட்டமாக நாளை வழங்கப்பட உள்ளது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கியிருந்தாலும், மீண்டும் சொட்டு மருந்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

.