வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.