திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றம் கோலாகலமாக தொடங்கியது.
. அண்ணாமலையார் சன்னதி அருகே 64 அடி உயர தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மங்கல இசையுடன் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றவிழா நடைபெற்றது.
அப்போது சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், விநாயகர், பராசக்தி அம்மன் ஆகியோர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கூடி அரோகரா முழக்கமிட்டு சாமிதரிசனம் செய்தனர்.

10 நாள்கள் நடைபெறும் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை, மாலை ஆகிய வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
உத்தராயண புண்ணிய கால உற்சவத்தை முன்னிட்டு மார்கழி மாத இறுதி வரை காலை மற்றும் இரவு நேரங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. 10ம் நாளான தை மாதம் முதல் தேதி தாமரை குளத்தில் தீர்த்தவாரி விழாவுடன் நிறைவுபெறவுள்ளது.

.