டோக்கியோ ஒலிம்பிக் : காலிறுதியில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி, பாட்மிட்டன் காலிறுதியில் பி.வி.சிந்து..

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு தகுதி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஆக்கி லீக் போட்டியில் அர்ஜென்டினாவை இந்திய அணி வீழ்த்தியது.
அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஆக்கி அணி வெற்றி பெற்றுள்ளது. ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் ஆக்கியில் லீக் சுற்றுப் போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியா – அர்ஜெண்டினா அணிகள் இன்று மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினாவை வீழ்த்தியது இந்திய அணி.

இந்தியாவின் சார்பில் ஹர்மன்ப்ரீத் சிங், விவேக் சாகர், வருண் குமார் ஆகியோர் சிறப்பாக விளையாடி கோல் அடித்தனர். இந்த வெற்றியின் காரணமாக இந்திய ஆடவர் ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதிப்பெற்றது. கடந்த ரியோ ஒலிம்பிக்கில் அர்ஜெண்டினாவிடம் தோற்று வெளியேறிய இந்திய அணி, இம்முறை டோக்கியோவில் பழிதீர்த்துள்ளது. கடந்த ஒலிம்பிக்கிலே அர்ஜெண்டினா அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

காலிறுதியில் பி.வி.சிந்து

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். டென்மார்க் வீராங்கனை மியா பிலிச்பெல்ட்டை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.