முக்கிய செய்திகள்

கலாசாரத்திற்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது : பிரதமர் மோடி ட்விட்..

கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என சென்னை வந்த பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் எனவும் கூறியுள்ளார்.