முக்கிய செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தல் : கோத்தபய ராஜபக்சவுக்கு அதிபர் சிறிசேனா ஆதரவு..

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சவுக்கு அதிபர் மைத்திரிபால சிறி சேனா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அதிபர் தேர்தல் நவ. 16-ம் தேதி நடைபெறுகிறது.

இந்தத் தேர்த லில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜ பக்ச,

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலை மையிலான ஐக்கிய தேசியக் கட்சி சார் பில் சஜித் பிரேமதாச ஆகியோர் போட்டி யிடுகின்றனர்.

இதுதவிர மக்கள் விடுதலை முன் னணி சார்பில் அநுர குமார திசநாயக்க, இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேரா,

தேசிய மக்கள் இயக்கம் சார்பில் | முன்னாள் ராணுவ தளபதி மகேஷ் சேனா நாயக்க, கிழக்கு மாகாண முன்னாள் ஆளு நர் ஹிஸ்புல்லா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 35 பேர் களத்தில் உள்ளனர்.

மலையக மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கும்,

டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபய ராஜபக்சவுக்கும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை, பிரதானக் கட்சி களான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வும், ஐக்கிய தேசிய கட்சியும் கோரியுள்ளன.

இந்திய வம்சாவளி மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரதான 32 பிரச்சினைகளுக் கான தீர்வினை வழங்கும் வேட்பாளருக்கு ஆதரவு என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அதி பரையே மீண்டும் களமிறங்குமாறு அக் கட்சியின் மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்டபோதிலும் மைத்திரிபால சிறிசேன மறுத்துவிட்டாார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், லங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையே தேர்தல் உடன் படிக்கை ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார் பில் பொதுச் செயலாளர் தயாசிறி ஜய சேகரவும், லங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் பொதுச் செயலாளர் சாகல காரியவசமும் கையெழுத்திட்டனர்