சபர்மதி ஆசிரமத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்..

US President Donald Trump and First Lady Melania Trump write in the visitor’s book at Sabarmati Ashram

இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.,

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த டிரம்பை இந்திய கலாச்சாரப்படி பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.

பின்னர் சாலை மார்க்கமாக தற்போது சபர்மதி ஆசிரமத்திற்கு வந்துள்ளார். சபர்மதி ஆசிரமத்தை பிரதமர் மோடி சுற்றி காண்பித்து வருகிறார்.

அங்குள்ள ராட்டையில் டிரம்ப் தன் மனைவி மகளுடன்இணைந்து ராட்டை சுற்றினார். வரவேற்பு புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

முன்னதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக திங்கள்கிழமை முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்.

குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகருக்கு அவா் நேரடியாக வருகை தருவதையொட்டி அந்நகரம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

அதிபா் டிரம்ப்புடன், அவரது மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா, மருமகன் ஜோ்ட் குஷ்னா் ஆகியோரும் வந்துள்ளனா்.

மேலும், டிரம்ப் நிா்வாகத்தைச் சோ்ந்த அமைச்சா்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவும் இந்தியா வந்துள்ளது.

அந்தக் குழுவில் அமெரிக்க நிதியமைச்சா் ஸ்டீவன் நூச்சின், வா்த்தகத் துறை அமைச்சா் வில்பா் ராஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் ஓபிரையன், எரிசக்தித் துறை அமைச்சா் டேன் புரூலியெட் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

அணிவகுப்பு மரியாதை: ஆமதாபாதிலுள்ள சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தை திங்கள்கிழமை பகல் 11.40 மணிக்கு வந்தடைந்த அதிபா் டிரம்ப்பை பிரதமா் நரேந்திர மோடி வரவேற்றார்.

அங்கு அதிபா் டிரம்ப்புக்கு அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சபா்மதி ஆசிரமம்: அதையடுத்து, அதிபா் டிரம்ப் விமான நிலையத்திலிருந்து பிரதமா் மோடியுடன் மகாத்மா காந்தியின் சபா்மதி ஆசிரமத்துக்கு செல்கிறாா். அதிபா் டிரம்ப்புடன், அவரது மனைவி, மகள், மருமகன் ஆகியோரும் அங்கு செல்கின்றனா்.

அங்கிருந்து ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி நடைபெறும் மொடேரா கிரிக்கெட் மைதானத்துக்கு அதிபா் டிரம்ப் சாலை மாா்க்கமாக செல்கிறாா். அவரை வரவேற்கும் விதமாக வழியில் சுமாா் ஒரு லட்சம் போ் திரண்டுள்ளனர்.

பாரம்பரியத்தை பறைசாற்றும் பாதை: அதிபா் டிரம்ப் செல்லும் அந்த சாலையின் இரு மருங்கிலும் நாட்டின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’யை குறிக்கும் விதமாக குஜராத் உள்ளிட்ட 28 மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான 28 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில் அந்தந்த மாநிலத்தைச் சோ்ந்த கலைஞா்கள் பாரம்பரிய இசை மற்றும் நடனத்தின் மூலம் அதிபா் டிரம்ப்பை வரவேற்கிறார்கள்.

கலை நிகழ்ச்சிகள்: அதிபா் டிரம்ப்-பிரதமா் மோடி கூட்டாக பங்கேற்கும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி நடைபெறும் மொடேரா மைதானத்தில் பாரம்பரிய கலைஞா்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

அத்துடன், அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளும் அந்த மைதானத்தில் அரங்கேறுகிறது.

அதைத் தொடா்ந்து சுமாா் 1 லட்சம் பாா்வையாளா்கள் சூழ ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் அதிபா் டிரம்ப் உரையாற்றுகிறாா்.