பாலஸ்தீனத்திற்கு அடுத்து பாகிஸ்தானுக்கும் கைவிரித்த அமெரிக்கா!

பாலஸ்தீன அகதிகளுக்கு உதவுவதற்கான நிதி வழங்குவதை அண்மையில் நிறுத்திய அமெரிக்கா, தற்போது பாகிஸ்தானுக்கு அளித்து வந்த 300 மில்லியன் டாலர் நிதியுதவியையும் நிறுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை விடுத்துள்ள அறிக்கையில், தெற்காசியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்கான எந்த நடவடிக்கையையும் பாகிஸ்தான் எடுக்கவில்லை என்றும், தீவிரவாதத்தை குறைப்பதற்காக ஆக்கப்பூர்வ நடவடிக்கையையும் அந்த நாடு எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் தீவிரவாத தடுப்பு நிதியை நிறுத்தப் போவதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் டிரம்ப் அறிவித்திருந்ததும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த 300 மில்லியன் டாலர் உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பெண்டகன் அறிவித்துள்ளது.

பாலஸ்தீன அகதிகளுக்கு உதவும் ஐநாவின் அமைப்புக்கு அளித்து வரும் உதவி நிதியை நிறுத்துவதாக நேற்று முன்தினம் அமெரிக்கா அறித்திருந்தது. ஐநாவின் உதவியைப் பெறும் பாலஸ்தீன அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதை ஏற்க முடியாது என ட்ரம்ப் நிர்வாகம் அதற்கு விளக்கம் அளித்திருந்தது.

US Stop the AID fund to Pakistan