மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் மக்களுக்கு அத்தியாவிசயப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில்

மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேவையின்றி மக்கள் வெளியே நடமாடுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அழுகக் கூடிய பொருட்களை குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகளில் சேமிக்கலாம்.

பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இயங்கும். விளைபொருட்களை 180 நாட்கள் அரசு சேமிப்புக் கிடங்குகளில் வைத்து பாதுகாக்கலாம். சேமிப்புக் கிடங்கிற்கான வாடகைக் கட்டணத்தை 30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.