முக்கிய செய்திகள்

வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம் : தெற்கு ரயில்வே…


தாம்பரம் – வேளாங்கண்ணி இடையே செப். 8 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் திருச்சி – வேளாங்கண்ணி இடையே செப். 8 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு, வேளாங்கண்ணி – நாகர்கோவில் இடையே செப்.3 ஆம் தேதி பிற்பகல் 2.20 மணிக்கும், வேளாங்கண்ணி – சென்னை சென்ட்ரல் இடையே ஆக. 31, செப். 7 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும். சிறப்பு கட்டண ரயில்களுக்கான முன்பதிவு ஆக. 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.