முக்கிய செய்திகள்

மாணவி தற்கொலை: சத்யபாமா பல்கலை., விடுதிக்கு தீவைத்த மாணவர்கள்

சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி விடுதிக்கு தீ வைத்தனர். 

சென்னை செம்மஞ்சேரி அருகே சத்யபாமா பல்கலைகழகம் உள்ளது. இங்கு நடந்த தேர்வில் முதலாம் ஆண்டு படித்து வரும் தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த ராகமோனிகா என்ற மாணவி காப்பியடித்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவியை ஆசிரியர்கள் கண்டித்ததால் மன வேதனையடைந்து விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் மாணவி தற்கொலைக்கு காரணமான பல்கலைகழக நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள், இன்று இரவு பல்கலைகழக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது. இதனையடுத்து பல்கலைகழக நிர்வாகத்தினர் மாணவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த சமரசம் ஏற்படவில்லை.

 

இந்நிலையில் மாணவி தற்கொலைக்கு காரணமான பல்கலைகழக நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள், புதன் கிழமை (21.11.17)  இரவு பல்கலைகழக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது. இதனையடுத்து பல்கலைகழக நிர்வாகத்தினர் மாணவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த சமரசம் ஏற்படவில்லை.

Violence, arson at Chennai’s Sathyabama University after student kills herself