முக்கிய செய்திகள்

டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது ஆண்டாக ஆயிரம் ரன்கள்: கோலியின் தொடர் சாதனை

 

டெஸ்ட் போட்டிகளில்  3-வது ஆண்டாக ஆயிரம் ரன்களை குவித்து  விராத் கோலி தொடர் சாதனை படைத்துள்ளார்.

ராஜ்கோட்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் கேப்டன் விராட் கோலி 139 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இதன்மூலம் 24-வது சதத்தை எட்டிய கோலி பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தி உள்ளார்.

72-வது டெஸ்டில் விளையாடும் விராட் கோலி 123 இன்னிங்சில் பேட்டிங் செய்து 24 சதங்களை அடித்துள்ளார்.

விராட் கோலி இந்த ஆண்டில் இதுவரை 4 சதம், 4 அரைசதங்கள் உள்பட 1,018 ரன்கள் (9 டெஸ்ட்) சேர்த்துள்ளார். இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் கோலி தான். அவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (10 டெஸ்டில் 719 ரன்) இருக்கிறார்.

விராட் கோலி தொடர்ந்து 3 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்து அசத்தியுள்ளார். 2016-ம் ஆண்டில் 1,215 ரன்களும், 2017-ம் ஆண்டில் 1,059 ரன்களும் எடுத்து கோலி சாதனை புரிந்துள்ளார். இதனால் தொடர்ந்து 3 ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர் இவர் என்பதும், ஒட்டுமொத்த அளவில் 6-வது வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.