முக்கிய செய்திகள்

டெஸ்ட் போட்டியில் 6வது இரட்டை சதம்: சச்சின், ஷேவாக் சாதனையை சமன் செய்த விராத் கோலி

virat kohli

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, ச்சின், ஷேவாக் சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கேட் வீரர்களான சச்சின் மற்றும் ஷேவாக் 6 முறை இரட்டை சதம் அடித்தனர். இதனையடுத்து சச்சின், ஷேவாக் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.   மேலும் 5 முறை சதம் அடித்த மேற்கிந்திய அணி வீரர் பிரையன் லாராவின் சாதனையையும் கோலி முறியடித்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6-வது இரட்டை சதம் அடித்து கோலி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 6 முறை இரட்டை சதம் அடித்துள்ள 3-வது வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்ட் போட்டியில் 104 ரன்கள் அடித்தார், 2-வது டெஸ்ட் போட்டியில் 213 ரன்களும் அதை தொடர்ந்து 3-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அபாரமாக விளையாடி இரட்டைசதம் அடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2-வது இரட்டை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Virat kohli surpasses Sachin Tendulkar and Virender Sehwag