முக்கிய செய்திகள்

நெஞ்சை உறையவைக்கும் பெண் சிசுக் கொலை : மதுரையில் தொடரும் அவலம்..

மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்று நாமக்கல் கவிஞர் பாடினார்.

பெண் குழந்தைகளை தெய்வமாக கொண்டடும் நம் தெசத்தில் பெண் சிசுவை கொல்லும் கொடூர எண்ணம் கொண்ட பாதகர்களை் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடந்த பெண் சிசு கொலை நெஞ்சை உறைய வைக்கிறது. 21ஆம் நூற்றாண்டிலும் இதுபோன்று அவலம் நடைபெறுவது வெக்கக்கேடானது.

பெண் இனத்தை போற்றி பாதுகாத்த சமூகம் இன்று கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் நிலையை காணும் போது மனம் வலிக்கிறது.

இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட சிசுவின் தந்தை, பாட்டிக்கு உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு மட்டுமல்லாமல்,

பெண்சிசு கொலை.. நடக்காமல் இருக்க உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

வரதட்சணை, ஆண் பெண் பாகுபாடு போன்ற அவலங்களை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும்