முக்கிய செய்திகள்

பெண்கள் பாதுகாப்பு: சென்னைக்கு முதலிடம் ..


நாட்டின் 6 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதில் டெல்லி முதலிடத்திலும், சென்னை கடைசி இடத்திலும் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
டெல்லி, மும்பை, சென்னை உள்பட 6 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் குறித்த புள்ளிவிபரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தலைநகர் டெல்லியில் தான் பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடந்துள்ளன.