ஆசிய கோப்பை மகளிர் டி20 தொடர்: இறுதி போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி …

ஆசிய கோப்பை மகளிர் டி20 தொடரில் அரையிறுதிக்கு நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
முன்னதாக பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய தாய்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.