முக்கிய செய்திகள்

உலகக் கோப்பைக் கால்பந்து : பிரேசில் காலிறுதிக்குத் தகுதி ..


உலகக் கோப்பைக் கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் மெக்ஸிகோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது. பிரேசில் அணி தரப்பில் நெய்மர் மற்றும் ஃபிர்மினோ ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த போட்டியில் தோல்வியடைந்த மெக்ஸிகோ, தொடரை விட்டு வெளியேறியது.