உலகிலேயே கடல் மீது கட்டப்பட்ட மிக நீளமான பாலம் : சீனா சாதனை..

உலகிலேயே கடல் மீது கட்டப்பட்ட மிகவும் நீளமான பாலம் சீனாவில் வரும் 24 -ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

சீனா – ஹாங்காங் இடையிலான பயண தூரத்தை குறைக்கும்நோக்கில் திட்டமிடப்பட்டு, ஜூஹாவ் – மகோ ((Zhuhai-Macao)) நகரங்களை இணைத்து கடலில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதற்கான கட்டுமானப்பணிகள் 2009 ஆம் தொடங்கின. 55 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடல் பாலத்தின் பயணிக்கும்போது, சீனாவின் ஜூஹாவ் நகரிலிருந்து, ஹாங்காங்கின் மகோ என்ற இடத்தை அரை மணி நேரத்தில் அடைய முடியும்.

இயற்கைச் சீற்றங்களால் பாதிப்புகள் ஏற்படாதவகையில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம், வரும் 24-ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளது.