முக்கிய செய்திகள்

எடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..


கர்நாடகாவில் பாஜக.வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங். மனு செய்துள்ளது.
கர்நாடகாவில் தனிபெரும் கட்சியாக பாஜக உள்ளதால் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய் வாலா இன்று அழைப்பு விடுத்தார். நாளை எடியூரப்பா முதல்வராக பதவியேற்கிறார். இதற்கு காங். கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கவர்னர் முடிவுக்கு எதிராக நள்ளிரவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டிற்கே சென்று முறையிட முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக காங்.சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி சார்பில் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. .
அதில் நாளை நீதிமன்றம் துவங்கும் முன்பே முதல்வராக எடியூரப்பா பதவியேற்க உள்ளார். காங்., மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு பெருமபான்மை இருந்தும் ஆளுநர் அழைக்கவில்லை. முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு நடந்துவிட்ட பின்னர் வழக்கு தொடர்ந்தால் சட்டசிக்கல்கள் உள்ளன. எனவே இந்த முறையீட்டு மனுவை இரவே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எடியூரப்பா பதவியேற்புக்கு தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தலைமை நீதிபதியிடம் நேரம் கேட்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.