இலங்கையில் காவல்துறையை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார் அதிபர் சிறிசேன

இலங்கையில் காவல்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் அதிபர் மைத்ரிபால சிறிசேன கொண்டு வந்துள்ளார்.

இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பெற்று, 9 நாட்கள் கடந்த நிலையில், அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதில் காவல்துறையை, தான் வகிக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சிறிசேன கொண்டு வந்துள்ளார்.

இதேபோல் அரசாணைகளை வெளியிடும் பொறுப்பையும் அவர் கூடுதலாகப் பெற்றுள்ளார். இதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அரசமைப்புச் சட்டம் 19ன் படி, காவல்துறையை அதிபர் சிறிசேன கட்டுப்படுத்த முடியாது என்றும், பாதுகாப்புத் துறையை தவிர்த்து வேறு எந்த பொறுப்பையும் அவர் வகிக்க முடியாது என்றும் ரணில் கூறியுள்ளார்.