தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி,கோவை, திண்டுக்கல்,தேனி,மதுரை, விருதுநகர், நெல்லை,தென்காசி,குமரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் அக்., 16-தேதி 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.