ப.சிதம்பரத்தின் 75-வது பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவருக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி

இந்திய நாட்டின் நிதி அமைச்சராக இருந்து அரும்பணியாற்றியவரும் – சட்ட அறிஞரும், ஆழ்ந்த அரசியல் சிந்தனையாளருமான திரு. ப.சிதம்பரம் அவர்களின் 75-வது பிறந்த நாள் இன்று!
இளமைக் காலம் முதல் காங்கிரஸ் இயக்கத்துக்காகத் தன்னை அர்ப்பணித்து சீரிய முறையில் செயல்பட்டு வரும் , தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான ப.சிதம்பரம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆக்கம் நிறைந்த அறிவுவழிகாட்டல் என்றென்றும் தொடரட்டும்!
என பதிவிட்டுள்ளார்.