`மாவோவிற்கு பிறகு சீனாவின் சக்திவாய்ந்த தலைவராக`, ஷி ஜின்பிங்..

ஷி ஜின்பிங்கின் பெயரையும் சித்தாந்தங்களையும் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்க தேவையான ஆதரவை பேணுவதற்கான வாக்கெடுப்பை சீன கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியுள்ளது. இதன் மூலம், அக்கட்சியை நிறுவிய மா சே துங்கிற்கு நிகரானவர் ஆகிறார் ஷி ஜின்பிங்.
சீனாவின் மிகமுக்கிய அரசியல் கூட்டமான, கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் இறுதியில், `ஜின்பிங்கின் கோட்பாடுகளை` சேர்ப்பதற்கான இந்த ஒருமித்த வாக்கெடுப்பு நடைபெற்றது.
2012 ஆம் ஆண்டு, அக்கட்சிக்கான தலைவரானது முதல், ஜின்பிங் தனது பிடியை மிகவும் சரியான முறையில் அதிகரித்து வருகிறார்.
இதன்மூலம், ஜின்பிங்கை நோக்கிய எந்த சவாலாக இருந்தாலும், அது சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு எதிரான அச்சுறுத்தலாகவே பார்க்கப்படும்.
கடந்த வாரம் இந்த மாநாடு, ஜின்பிங்கின் மூன்று மணிநேர உரையுடன் துவங்கியது. இதில் அவர், ` சோசலிசம் மற்றும் புதிய சகாப்தத்தில் சீனாவின் பண்புகள்` என்ற தலைப்பில் தனது தத்துவத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
அதை தொடர்ந்து, உயர் அதிகாரிகளும், அந்நாட்டின் ஊடகங்களும் தொடர்ந்து அதை, `ஷி ஜின்பிங்கின் கோட்பாடுகள்` என்றே குறிப்பிட்டன. இதுவே, அவருக்கு அக்கட்சியில் உள்ள பலத்தை உறுதிபடுத்தியதற்கான குறியீடாக இருந்தது.இதற்கு முன்பு, மாசே துங்கின் பெயர் மட்டுமே இதுவரை சித்தாந்தத்துடன் சேர்க்கப்பட்டு இருந்தது.
சீனாவின் புதிய மந்திரம், கூறுவதற்கு மிகவும் சுலபமாக இல்லை.
ஆனால், நாட்டில் உள்ள 90 மில்லியன் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து, பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் நாட்டின் தொழிற்சாலைகளில் பணிபுரிவோரும், சோசலிசம் மற்றும் சீன பண்புகளின் புதிய சகாப்தத்தில், ` ஜின்பிங்கின் சித்தாந்தங்களை` படிக்க வேண்டும்.
`புதிய சகாப்தம்` என்ற சொற்றாடல், நவீன சீனாவின் மூன்றாவது சகாப்தம் இது என்பதை விளக்குவதாகும்.
அதாவது, முதல் தலைவரான மாவோவிற்கு கீழ், உள்நாட்டு போரால் பிளவுபட்டு இருந்த நாடு ஒன்று பெற்றது என்றால், இரண்டாவது தலைவரான டெங்கின் கீழ், நாடு வளமடைந்தது என்றால், இந்த புதிய சகாப்தத்தில், நாடு இன்னும் அதிக ஒற்றுமை மற்றும் வளங்களை பெறுவது மட்டுமின்றி, உள்நாட்டின் ஒழுகத்தையும், வெளிநாட்டில் உறுதியும் பெற வேண்டும்.
கட்சியின் சட்டதிட்டத்தின்படி, இவை அனைத்தும், ஷி ஜின்பிங்கின் கீழே வரும் என்பது உறுதிப்படுத்தப்படுவதன் மூலம், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு அச்சுறுத்தல் அளிக்காமல், ஜின்பிங்கிற்கு சவாலாக எதிரிகளால் இருக்க முடியாது என்பதையே குறிக்கிறது.
வேறு என்ன நடக்கிறது?
இரண்டு ஆயிரம் அதிகாரிகள், அந்த வாரம் முழுவதும் நடந்த மாநாட்டில், மாகாணங்களுக்கான கட்சியின் தலைமை, ஆளுநர்கள் மற்றும் அரசால் நடத்தப்படும் சில நிறுவனங்களுக்கான தலைவர்களையும் தேர்வு செய்தனர்.
செவ்வாயன்று, மத்தியக்குழு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை ஆய்வுக்கான மத்திய குழுவின் அதிகாரிகள் பட்டியலை இறுதி செய்தனர்.
புதன்கிழமை, புதிய மத்திய குழு, கட்சியின் `அரசியல் தலைமைக் குழுவில்` இடம்பெற உள்ளோரை தேர்வு செய்வார்கள்.
மேலும், புதன்கிழமை, இந்த கட்சியின் உச்சக்குழுவின் புதிய உறுப்பினர்கள் யார் என்பது வெளியிடப்பட உள்ளதோடு, அரசியல் தலைமைக்குழு குறித்தும் தெரிவிக்கப்படும். ஜின்பிங்கே தலைவராக தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலைக்குழுவில் உள்ளவர்கள் ஆராயப்படுவார்கள். பீஜிங்கில் உள்ள பிபிசி செய்தியாளர் ராபின் பிராண்ட் கூறுகையில், இந்த மாற்றங்கள், தனக்கு பிறகு யார் தலைமையில் இருக்க வேண்டும் என ஜின்பிங் நினைத்துள்ளார் என்பதை வெளிக்கொண்டுவரும் அறிகுறியாக இருக்கும் என்கிறார்
ஜின்பிங்கின் ஆட்சி காலம், சீனாவில் கவனிக்கத்தக்க மாற்றங்களை கொண்டுவந்து, நவீனமயமாக்கலுக்கு உந்து சக்தியானது. உலக அரங்கில் நாட்டின் தன்முனைப்பை அதிகரித்தது.
ஆனால், அது சர்வாதிகாரம், தணிக்கை தன்மை மற்றும் மனித உரிமைகள் விவகாரத்தில் சிக்கல்களையும் கொண்டு வந்ததாகவே பார்க்கப்படுகிறது.
நன்றி
பிபிசி