ரஷ்ய அதிபர் தேர்தல்: விளாடிமிர் புதின் மீண்டும் வெற்றி..


ரஷ்ய அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் புதின் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. தற்போது அதிபராக உள்ள புதின் 76% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட குரூடின் 12% வாக்குகளை பெற்று 2-வது இடத்தில் உள்ளார். வெற்றிக்கு 50% வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் 76% வாக்குகளுடன் வெற்றி பெற்றார் புதின் உறுதி செய்தார். ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. இதில் தற்போதைய அதிபர் புதின் வெற்றி பெற்று 4-வது முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2012-ல் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றார். அவரது பதவிக் காலம் நிறைவடைவதால் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் விளாடிமிர் புதின் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பவெல் குருடினின், தொலைக்காட்சி அறிவிப்பாளர் செனியா சோப்சக், லிபரல் டெமாக்ரடிக் கட்சி சார்பில் விளாடிமிர் சிரினோவ்ஸ்கி உட்பட ஒட்டுமொத்தமாக 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 11 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர்.

அவர்களுக்காக 96,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 109 நாடுகளைச் சேர்ந்த 1,500 பார்வையாளர்கள் வாக்குப்பதிவை கண்காணித்தனர். வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் சுயேட்சையாக போட்டியிட்ட புதின் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-வது முறையாக அதிபராகும் வாய்ப்பை பெற்றார்.