100வது செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இந்தியா

இந்தியா தனது 100வது செயற்கைகோள் மற்றும் 2018ம் ஆண்டின் முதல் செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து வர்த்தக ரீதியிலான ராக்கெட்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கார்டோசாட் 2 சீரிஸ் ரக செயற்கைக்கோள் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான கவுன்ட்-டவுன் நேற்று காலை 5.29 மணிக்கு தொடங்கியது.

இந்த பி.எஸ்.எல்.வி. சி40 ராக்கெட்டில் இந்தியா-3, அமெரிக்கா, பிரான்ஸ், பின்லாந்து, கொரியா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்கள் 28 என்று மொத்தம் 31 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. செயற்கைக்கோள் வரிசையில் கார்டோசாட் 2, 7வது செயற்கைக்கோள். 710 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியின் இயற்கை வளங்களை படமெடுத்து அனுப்பும் வகையில் தொலையுணர்வு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த செயற்கைகோள், ஏவப்பட்ட 2 மணிநேரம் 21 நிமிடத்தில் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 505 கி.மீ உயரத்தில் புவியின் வட்டப்பாதையில் செயற்கைகோள் நிலை நிறுத்தப்படும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில், இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் கிரண் குமார் கூறுகையில், இஸ்ரோ பல தலைவர்களை கடந்து வந்துள்ளது. புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள கே.சிவனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.