முக்கிய செய்திகள்

2020ம் ஆண்டுக்குள் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் : காங்., தேர்தல் அறிக்கை

டெல்லி : மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையில் அறிவித்துள்ள முக்கிய திட்டங்கள் சில.,

* 2020ம் ஆண்டுக்குள் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்
* மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும்
* முன் நிபந்தனை இன்றி காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்
* மாதம் ரூ.6,000 திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும்
* தேச விரோத தடைச் சட்டம் நீக்கப்படும்
* இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை
* 2030க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும்
* 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
* நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் தேர்வு ரத்து செய்யப்படும்
* நீட் தேர்வு தேவையா, இல்லையா என்பதை மாநில அரசுகளே முடிவு செய்துக்கொள்ளலாம்