முக்கிய செய்திகள்

21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்

21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்தால் மட்டும் தான் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

உத்தரவை மீறி வெளியே நடமாடும் மக்களால் அவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரவும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்தார்.