முக்கிய செய்திகள்

5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்….

5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், நெல்லை, கன்னியாகுமரி, மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தற்போது நெல்லை, சிவகங்கை , கன்னியாகுமரி, மதுரை அண்ணா நகர், உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது.