முக்கிய செய்திகள்

5 வது ஒருநாள் போட்டி: தென் ஆப்ரிக்கா அணிக்கு 275 ரன்கள் வெற்றி இலக்கு


தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் 275 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபத் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து 275 ரன்கள் எடுத்ததால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி களமிறங்கவுள்ளது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக ரோகித் சர்மா 115 ரன்கள் எடுத்தார்.