தமிழக அரசுக்கு துரைமுருகன் கேள்வி..

திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்;

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலக்கெடு முடியும் கடைசி நாளில் தான் முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசிப்பதா? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது?

ஈபிஎஸ், ஓபிஎஸ் டில்லி சென்று மேலாண்மை வாரியம் வேண்டும் என கேட்க வேண்டியதுதானே. தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது; மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். மத்திய அரசை எதிர்த்தால் அடுத்த நாள் யாருக்கும் அமைச்சர் பதவி இருக்காது.

காவிரி பிரச்னையில் தற்போதைய நிலைக்கு மத்திய அரசுகளே காரணம்.பிரதமர் அலுவலகம் முன் அதிமுக எம்.பிக்கள் போராட்டம் நடத்தியிருக்கலாம். ஏன் செய்யவில்லை? இவ்வாறு கூறினார்.

 

தகவல் கசிவு, தேர்தல் தேதி கசிவு, வினாத்தாள் கசிவு என எத்தனை கசிவுகள்? : ராகுல்காந்தி காட்டம்..

கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

Recent Posts