மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது : உயர்நீதிமன்றம்..


சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தனி நீதிபதி வழங்கிய அனுமதியையும் ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, தொடர்ந்து வழக்கை விசாரித்தனர்.

இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள்,

தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியே என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


 

திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்…

திருவாரூர் மாவட்ட எல்லை வடுவூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

Recent Posts