தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருப்பவர்கள் வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
2019, ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருப்பவர்கள், தங்கள் பகுதிக்குட்பட்ட வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளார்.
அதனை சாலை அமைப்பதற்கு மாநகராட்சி பயன்படுத்திக்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஜனவரி 1 ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தால் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.