திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: விஜயகாந்த் கண்டனம்

திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இந்நிலையில் இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் இடைத்தேர்தலை அறிவித்த போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழக அரசோடு கலந்து பேசி முடிவெடுத்திருந்தால் ரத்து என்ற நிலை ஏற்பட்டிருக்காது.
ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது கேலிக்கூத்தாக, கேள்விக்குறியாக மாறியிருப்பது கண்டனத்திற்குரியது.
மக்கள் யாரும் தேர்தல் வேண்டும் என்று கேட்கவில்லை. வேண்டாம் என்றும் சொல்லவில்லை. புயல் பாதிப்பை அறியாமல் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததை மக்கள் கேலிக்கூத்தாக பார்க்கின்றனர்.

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க கோரிய வழக்கு : அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

கடலூர் பாலியல் வன்கொடுமை வழக்கு: மதபோதகர் அருள்தாஸுக்கு 30 வருட சிறை தண்டனை..

Recent Posts