இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது ..

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நாட்டுபடகு மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைப்பிடித்துள்ளது.

நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நாட்டுப்படகில் சங்கர், நாகூர், கவியரசன், ராசு உள்ளிட்ட ஆறு மீனவர்கள் நேற்று பிற்பகல் கடலுக்கு சென்றனர்.

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை, திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி மீனவர்களை கைது செய்ததுடன் நாட்டுபடகையும் பறிமுதல் செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டுசென்றனர்.

ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்டிருந்த மீனவர்கள் 4 பேர் நேற்று இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் 6 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

பழனி நவபாசன முருகன் சிலையை கடத்த நடந்த சதி : பொன்மாணிக்கவேல் குழு விசாரணை..

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் சென்னை வந்தடைந்தது..

Recent Posts