மணல் குவாரி வழக்கில் தமிழகம் உள்பட 5 மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

முறைகேடாக மணல் குவாரி நடப்பது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மணல் குவாரிகள் செயல்படுவதாக அழகர்சாமி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில் முறைகேடாக செயல்படும் மணல் குவாரிகளை முறைப்படுத்த உத்தரவிட அழகர்சாமி கோரியிருந்தார்.

அழகர்சாமி மனுவை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது.

அப்போது இந்த மனுவுக்கு தமிழகம் உள்பட 5 மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..

தென்காசியை புதிய மாவட்டமாக அறிவித்ததற்கு வைகோ வரவேற்பு..

Recent Posts