தமிழகத்தில் புதிதாக 5,986 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் புதிதாக 5,986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,61,435 -ஆக அதிகரித்துள்ளது. இன்று 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் இன்று 75,076 பேருக்கு நடந்த பரிசோதனையில் 5,986 பேருக்கு தொற்று உறுதியானது.

இதில் சென்னையில் 1177 பேர், செங்கல்பட்டில் 462 பேர், திருவள்ளூரில் 393 பேர், காஞ்சிபுரத்தில் 291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அளவில் மொத்த தொற்று எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது.

அதில் ஆண்கள் 2,18,123. பெண்கள் 1,43,283. 29 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் இருந்து இன்று 5,742 பேர் குணமடைந்தனர். மாநில அளவில குணமடைந்தோர் எண்ணிக்கை 3,01,913 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 53,283 பேர் மருத்துவமனையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு இன்று 116 இறந்தனர்.

இதில் தனியார் மருத்துவமனையில் 44 பேரும், அரசு மருத்துவமனையில் 72 பேரும் அடங்குவர். இவர்களில் 8 பேர் கொரோனாவால் மட்டும் மரணம் அடைந்துள்ளனர். 108 பேர் இணை நோய் மற்றும் கொரோனா காரணமாக இறந்தனர்.

இதில் 43 தனியார் மருத்துவமனைகளிலும், 65 அரசு, ரயில்வே, இஎஸ்ஐ உள்ளிட்ட மருத்துவமனைகளிலும் நிகழ்ந்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,239 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புக் கோர மாட்டேன் :வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் திட்டவட்டம்

தட்டட்டி கிராமத்தில் மரம் நடும் விழா :குன்றக்குடி அடிகளார் பங்கேற்பு..

Recent Posts