முக்கிய செய்திகள்

தட்டட்டி கிராமத்தில் மரம் நடும் விழா :குன்றக்குடி அடிகளார் பங்கேற்பு..

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பங்கேற்று மரக்கன்று களை நட்ட போது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தட்டட்டி கிராமத்தில் கிராம மக்கள் சார்பில் மரம் நடுவிழா நடைபெற்றது. விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பங்கேற்று மரக்கன்று களை நட்டார்.

தட்டட்டி கிராமத்தில் வருடந்தோறும் நடைபெறும் காவடி எடுப்ப திருவிழாவில் 9-ஆம் நாள் விழாவின் போது ஊர்மக்கள் சார்பில் எரிக்கரை அருகே மரங்கள் நிறைந்த சோலையில் மிகப் பெரிய அன்னதானம் நடைபெறும். அந்த சோலையில் பழமையான மரங்கள் அழிந்த நிலையில், அந்த இடத்தில்

நீர்மருது, இலுப்பை, மா,வேம்பு,உள்ளிட்ட மரக்கன்றுகளை குன்றக்குடி அடிகளார் நட்டுவைத்தார். விழாவில் தட்டட்டி ஊராட்சி மன்றத் தலைவர் இராஜேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

முன்னதாக அடிகளாருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏரிக்கரையில் உள்ள அஞ்சநேயர் கோயில் அருகே படித்துறையையும் திறந்து வைத்தார்.

இவ்விழாவினை சா.செல்லையா,மின்சார வாரியம் ஒருங்கிணைத்து விழா ஏற்பாடுகளைச் செய்து அறப்பணியையும் செய்து கொடுத்தார்.

செய்தி & படங்கள்
சாய்தர்மராஜ்