காரைக்குடியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி உடனிருந்தார்.
அப்போது பேசிய கார்த்தி சிதம்பரம் காரைக்குடி நகராட்சியில் நடைபெறும் பாதாளசாக்கடை பணி தொய்வாகவும் தரமற்றதாகவும் உள்ளதாக குற்றம் சாட்டினார். தரமற்ற முறையிலும் தாமதமானபணியாலும் காரைக்குடி மக்கள் கடந்த 2016 முதல் தற்போது வரை பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். 2019-ல் முடிக்க வேண்டிய பணிகள் தற்போது வரை முழுமையாக முடியவில்லை என குற்றம் சாட்டினார்.
இந்த பணி குறித்து தர நிர்ணய குழுவை அமைத்து டெண்டரை ரத்து செய்து மறு டெண்டர் விடக்கோரி தமிழக முதல்வர் அவர்களை நாளை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் கடிதம் அளிக்கவுள்ளார் என்றார்.
அந்த கடிதத்தில் காரைக்குடி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க 24.12.2014 ஆண்டு சுமார் 112 கோடியே 53 லட்ச ரூபாயில் செயல் படுத்த சென்னையைச் சேர்ந்த சுப்பையா கன்ஸ்டரக்ஸன் டெண்டர் எடுத்து 25.01.2016-ல் பணி தொடங்கப்பட்டு இன்று வரை பணி முடிக்கவில்லை. நானும் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியும் நேரில் வேலை நடைபெறும் பல இடங்களை ஆய்வு செய்த போது பணி முழுமையாக முடிக்கப்படவில்லை மேலும் பணி முடிந்த இடங்கள் அனைத்தும் தரமற்ற நிலையில் இருக்கிறது. இத்திட்டத்தை டெண்டர் எடுத்த நிர்வாகம் உள் டெண்டர் கொடுத்து பணி நடைபெற்று வருவதால் முடிந்த பணிகள் அனைத்தும் தரமற்றதாகவுள்ளது.
தமிழக முதல்வர் இந்த பாதாள சாக்கடை திட்டத்தை ஆய்வு செய்வதற்கு தர நிர்ணயக்குழ அமைத்து பணியை ஆய்வு செய்து தரமற்ற முறையில் பணி செய்த ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுத்து அரசின் வருவாய் இழப்பை அவர்களிடமிருந்து திரும்பப்பெற செய்து, ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய ஒப்பந்தம் விடுத்து உடனடியாக பாதாள சாக்கடை திட்டத்தை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு செயல்படுத்த வேண்டுகிறோம்.
பாதாள சாக்கடை திட்ட கணக்கெடுப்பு பணி எடுக்கும் போது பல்வேறு வீதிகளை கணக்கில் எடுக்காமல் சுமார் 22 கி.மீ பாதாள சாக்கடை பணி விடுபட்டுள்ளது. அதனை தற்போது நடைபெறும் பணியோடு சேர்த்து முடிக்க முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.
என முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியும் கையெழுத்திட்டுள்ளனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்