முக்கிய செய்திகள்

முஸ்லிம் கைதி முதுகில் “ஓம்” டாட்டூ வரைந்த சிறை அதிகாரி: திகார் சிறை திகுதிகு

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முஸ்லிம் கைதியின் முதுகில் இந்தி மொழியில் உள்ள ஓம் என்ற எழுத்தை சிறை அதிகாரியே வரைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபீர் என்ற கைதி, கார்காடூமா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது, தனது முதுகில் வரையப்பட்டுள்ள ஓம் டாடூவைக் காட்டி புகார் அளித்துள்ளார்.

அங்குள்ள சிறை கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுஹான் இந்த அட்டூழியத்தை அரங்கேற்றியதாக நபீர் நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, நபீரை அந்த அறையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றி விட்டதாகவும், சிறை கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகானின் இந்தச் செயல் குறித்து விரிவான அறிக்கை கேட்டிருப்பதாகவும் திகார் சிறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிறை அதிகாரிகளில் கூட இந்துத்துவ வெறியர்கள் ஊடுருவி இருப்பது இந்த சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.