முக்கிய செய்திகள்

அடிலெய்ட் டெஸ்ட் : 2ம் நாள் ஆட்டத்தில் ஆஸி., அணி 7விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள்

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் விறுவிறுப்பான நிலையில் முடிந்துள்ளது, ஆஸ்திரேலிய அணி தன் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியத் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இஷாந்த் சர்மா, பும்ரா, ஷமி பிரமாதமாக வீசினர் துல்லிய லைன் மற்றும் லெந்த் லேசான ஸ்விங் 140 கிமீ வேகம் என்று ஆஸி. பவுலிங்கைவிடவும் சிறப்பாக வீசினர்.

ஷமி நிறைய பீட்டன்கள் செய்தார் அவர் விக்கெட் எடுக்காமல் இருப்பது ஆச்சரியமே.

இது பேட்டிங் பிட்ச்தான், ஆனால் இதில் அஸ்வின் ஒரு வித்தியாசமாவார். பேட்டிங் பிட்சாக இருந்தாலும் ரன்களை சுலபத்தில் எடுக்க முடியாது என்று நேற்று புஜாரா தெரிவித்தார்,

பேட்ஸ்மெனாக இருந்தாலும் பவுலராக இருந்தாலும் பொறுமை கோரும் ரக பிட்ச் ஆகும் இது.

ஆட்ட முடிவில் இடது கை வீரர் ட்ராவிஸ் ஹெட் 61 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கடந்த முறை அடிலெய்ட் டெஸ்ட்டில் தற்காலிக கேப்டனான விராட் கோலி, அஸ்வினுக்குப் பதில் லெக் ஸ்பின்னர் கரன் ஷர்மாவைத் தேர்வு செய்தார்,

அந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, விஜய்யின் அபார பேட்டிங்கில் இந்திய அணி பெரிய இலக்கை விரட்டி குறைந்த இலக்கில் தோற்றது,

மறக்க முடியாத அந்த டெஸ்ட் போட்டியில் ஒருவேளை அஸ்வின் ஆடியிருந்தால் இந்திய அணி வென்றிருந்தாலும் வென்றிருக்கும்.

அதன் நினைவு காரணமாகவோ என்னவோ அஸ்வின் அடிலெய்டில் தற்போது மிகப்பிரமாதமாக வீசினார்.

இந்திய வேகப்பந்து வீச்சும் ஆஸ்திரேலிய பேட்டிங்குக்கு எளிதான ரன்களை வழங்கவில்லை. 88 ஓவர்களில் 191 ரன்களைத்தான் எடுத்துள்ளது.

2.17 என்ற ரன் விகிதம்தான் இது 1990-ம் ஆண்டை விடவும் மிகக்குறைந்த ரன் விகிதமாம், குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு அதன் சொந்த மண்ணில் என்கிறது புள்ளி விவரங்கள்.

இந்தியா 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு முதல் ஓவரில் 3ம் பந்திலேயே அருமையான ஃபுல் லெந்த் இன்ஸ்விங்கரில் இஷாந்த் சர்மா, ஏரோன் பிஞ்சை பவுல்டு செய்து பரபரப்புத் தொடக்கம் கொடுத்தார்.

இதனால்தான் இவரை விக்டோரியா அணியின் கோச் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், பிஞ்ச்சை மிடில் ஆர்டரில் களமிறக்குகிறார்.

அறிமுக வீரர் மார்கஸ் ஹாரிஸ் நன்றாக ஆடினார், பந்தை வரவிட்டு தாமதமாக ஆடுகிறார், வேகப்பந்து வீச்சுக்கு எதிராக நல்ல பொறுமை காட்டினார், தைரியமும் காட்டினார்,

அஸ்வின் வந்தவுடன் இறங்கி வந்து 2 பௌண்டரிகளை அடித்தார். ஆனால் ஒரு ஆஃப் வாலி பந்தில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு 26 ரன்களில் அவர் முரளி விஜய்யிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஷான் மார்ஷ் இன்று கேலிப்பொருளாகிவிட்டார், இவர் ஒரு ஓவர் ட்ரைவ் அடிக்கப்போக பந்தை வாங்கி உள்ளே விட்டுக் கொண்டார்,

இதனால் ட்விட்டரில் இவரை ‘ஒவர் ரெய்டு’ செய்து வருகின்றனர். ஃபிஞ்ச் போலவே இதுவும் ஒரு அலட்சியமான ஷாட்.

உஸ்மான் கவாஜா பொறுமையாக ஆடினார் ஆனால் அவர் விருப்பத்திற்கேற்ப ரன்களை எடுக்க முடியவில்லை,

காரணம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய பிரமாதமான லெந்த். 135 பந்துகள் ஆடி 28 ரன்களையே அவர் எடுத்து அஸ்வின் பந்தை முன்னால் வந்து ஆடினார் பந்து திரும்பி கிளவ்வில் பட்டு பந்த்திடம் கேட்ச் ஆனது.

ஒரு விதத்தில் ரிஷப் பந்த்தை நேதன் லயன் எடுத்தது போன்றதுதான் இது. கோலி மிகச் சமயோசிதமாக ரிவியூ கேட்டு அவுட் பெற்றார். அஸ்வின் 3 விக்கெட்டுகள், மூன்றும் இடது கை வீர்ர்கள்.

ஹேண்ட்ஸ்கம்ப் 5 பவுண்டரிகளுடன் 93 பந்துகள் நின்று 34 ரன்கள் எடுத்தார், மொகமது ஷமியின் ஷார்ட் பிட்ச் உத்திகளை நன்றாகக் கவனித்தார்.

அஸ்வினையும் நன்றாக ஆடினார். ஆனால் பும்ரா வீசிய ஃபுல் லெந்த் பந்தை ஸ்டியர் செய்ய முயன்றார், அது உடலுக்கு நெருக்கமாக வந்த பந்து பந்த்திடம் கேட்ச் ஆனது.

டிம் பெய்ன் பரிதாபமாக ஆடினார், அவர் 20 பந்துகள் நின்று 5 ரன்களில் உறுதியற்ற ஒரு ஆட்டத்தில் கடைசியில் இஷாந்த் சர்மாவின் அபார பந்துக்கு பந்த்திடம் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

பாட் கமின்ஸ் 10 ரன்களுக்கு 47 பந்துகள் தாக்குப் பிடித்தார். இவரும் ஹெட்டும் 5 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.

நேற்று புஜாரா போல் இன்று ஆஸ்திரேலிய அணியை ஒருங்கிணைந்து அழைத்துச் செல்பவர் ட்ராவிஸ் ஹெட் இவர் 6 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தும் மிட்செல் ஸ்டார்க் 8 ரன்கள் எடுத்தும் ஆடி வருகின்றனர்.