முக்கிய செய்திகள்

அதிமுக கொடியை பயன்படுத்தும் வழக்கு உச்சநீதி மன்றத்தில் உள்ளது : டிடிவி தினகரன்..

அதிமுக கொடியை பயன்படுத்துவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும்போது அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் என டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டினார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் திமுக கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் தங்களுக்கு ஆதரவாக இல்லை எனக் கூறினார்.

மூன்று எம்.எல். ஏ களுக்கு நோட்டீஸ் கொடுத்த பிறகு திமுக தீர்மானத்தால் ஒன்றும் பயன் இல்லை என்றும் குறிப்பிட்டார்.