முக்கிய செய்திகள்

அதிமுகவில் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..

அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அமைப்பு செயலாளர்களாக 19 பேர் நியமனம்

பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், ராஜ கண்ணப்பன் , சி.வி.சண்முகம், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், கோகுலஇந்திரா, சண்முகநாதன் , ஆதிராஜாராம்,பிரபாகர், சோமசுந்தரம், சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன் ,புத்திசந்திரன், முருகுமாறன், நியமிக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க கொள்கை பரப்பு துணை செயலாளராக வைகை செல்வன், அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக சிவபதி, அதிமுக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளராக பரஞ்சோதி , அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக ராமசந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுக மீனவர் பிரி வு இணை செயலாளராக ஜெயபால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் துரைக்கண்ணு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தேனி மாவட்ட செயலாளராக சையது கான், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக சத்யா, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் நியமிக்கப்படும் வரை பணிகளை கவனிக்க எஸ்டிகே ஜக்கையன் யு.ஆர். கிருஷ்ணன்,ராசு,சங்கரதாஸ் ஆகிய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.