முக்கிய செய்திகள்

அமர்த்தியா சென் ஒரு துரோகி; : சுப்பிரமணியன் சுவாமி..


பாரத ரத்னா விருது பெற்ற அமர்த்தியா சென் ஒரு துரோகி என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் இந்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்திருந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ரந்தீவ் சர்ஜிவாலா தெரிவித்திருந்தார். வேத் பிரகாஷ் நந்தா, பரமேஷ்வர் போன்ற தீவிர ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் மற்றும் பாஜகவை வளர்ப்பவர்களுக்குத் தான் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார்.

 

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி, ‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் இந்தியக் குடிமகன்கள்தான். அவர்களது கடின உழைப்புக்காக ஆதாயம் அடையாதவர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சமூக சேவை செய்யக்கூடியவர்கள்.

 

தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு அமர்த்தியா சென் என்ற துரோகிக்கு பாரத ரத்னா வழங்கியது. நாலந்தா பல்கலைக்கழகத்தை சூறையாடியதைத் தவிர அவர் என்ன செய்திருக்கிறார். அவர் ஒரு இடதுசாரி என்பதாலும், சோனியா காந்தியின் தூண்டுதலாலும்தான் பாரத ரத்னா விருது பெற்றார்’ என தெரிவித்துள்ளார்.