முக்கிய செய்திகள்

புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கோகலே பதவியேற்பு..


இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய் சங்கரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய செயலாளராக விஜய் கேசவ் கோகலே நியமிக்கப்பட்டார். இதையடுத்து விஜய் கோகலே இன்று பொறுப்பேற்றார். இவர் இரண்டு ஆண்டு காலம் செயலாளராக பதவி வகிப்பார்.

வெளியுறவுத்துறையில் பொருளாதார பிரிவு செயலராக பதவி வகித்த விஜய் கேசவ் கோகலே, சீனா, ஜெர்மனி, தைவான் ஆகிய நாடுகளில் தூதராகவும் பணியாற்றியவர். டோக்லாம் பிரச்சனையில் சீனாவுடன் சுமூக தீர்வு காண்பதில் விஜய் கேசவ் கோகலே முக்கிய பங்காற்றினார். இவர் 1981-ம் ஆண்டு முதல் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றிய அனுபவமிக்கவர்.