முக்கிய செய்திகள்

காஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக குரல் கொடுத்துள்ள அமிதாப்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக கருதப்பட்டு வந்த தஞ்சைத் தரணி, கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் பேரழிவைச் சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிக்கரங்கள் நீள்கின்றன. இந்நிலையில், கஜா புயல் ஏற்படுத்தி இருக்கும் அழிவின் தாக்கத்தை தமிழகத்தி்ற்கு வெளியே இந்திய மற்றும் உலக அளவில் அனைவரும் அறியும் வகையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வீடியோ உரை மூலம் குரல் கொடுத்திருக்கிறார். இந்தியாவிலுள்ள சமூக அக்கறையுள்ள குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறும் அவர் அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.