முக்கிய செய்திகள்

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி…

அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார் தி.மு.க தலைவர் கருணாநிதி. கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் கருணாநிதி .

அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து வந்தார்.இந்நிலையில் இன்று 18-ம் தேதி இரவு கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார்.

அவரை செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் பலர் வரவேற்றனர்.
மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் அண்ணா அறிவாலயம் வந்துள்ள கருணாநிதி, அவரது அறைக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு மீண்டும் கோபாலபுரம் இல்லத்திற்கு திரும்பினார்