முக்கிய செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளின் தேர்வு ஒத்திவைப்பு..

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில்,

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 15ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.