திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா : தேர் திருவிழா ரத்து …

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள மலையில் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை திருநாளன்று மலை உச்சியில் மகாதீபம் எற்றப்படும்.

பல்லாயிரம் மக்கள் தீபத்திருநாளன்று மலையைச் சுற்றி கிரிவலம் வருவார்கள். தற்போது கரோனா தொற்றால் கார்த்திகை தீபத் திருநாள் சமூக இடைவெளியோடு கொண்டாட இந்து அறநிலையத்துறையும் மாவட்ட நிர்வாகமும் முடிவெடுத்துள்ளன.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருநாளன்று கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் வரும் 29-ம் தேதி கோயிலுக்கு வர, கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவிழா நடக்கும் 9 நாட்களில் நாள் ஒன்றுக்கு 5000 பக்தர்களுக்கு மட்டும அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான வழிகாட்டு நெறிமுறை:

  • 17.11.2020 அன்று தூர்க்கை அம்மன் உற்சவததில் தொடங்கி 3.12.2020 அன்று சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா வரை 17 நாட்கள் தீபத் திருவிழா நடைபெற உள்ளது.
  • 20.11.2020 அன்று அருணாசலேஸ்வரார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கும்
  • 10-ம் நாள் 29.11.2020 அன்று கோவில் வளாகத்தினுள் அதிகாலை 4. மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
  • கொரோனா நோய் தடுப்பு முறையில் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய காலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை பக்தர்களுக்கு கொரோனா வழிகாட்டுதலின்படி தரிசனத்துக்கு அனுமதி.
  • வார நாட்களில் சுமார் 4000 முதல் 5000 பக்தர்கள், விடுமுறை மற்றும் இறுதி நாட்கள், பெளர்மணி, அமாவாசை மற்றும் பண்டிகை போன்ற நாட்களில் சுமார் 8000 பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்திற்கு அனுமதி.
  • தற்போது நடைபெற உள்ள தீபத்திருநாளில் 17.11.2020 முதல் 03.12.2020 வரை 29.11.2020 தீபத் திருநாள் தவிர தினந்தோறும் சுமார் 5000 பக்தர்களுக்கு சவாமி தரிசனம் செய்ய அனுமதி.
  • திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலுக்கு வரும் www.arunachaleswawawtemple.tnhrce.in என்ற இணையத்தளத்தில் e-registration மூலம் ஒரு நபருக்கு ஒரு நுழைவு சீட்டு என்ற முறையில் கட்டணமில்லாமல் ஆன்லைனில் முன்பதிவு செய்து உரிய அடையாள அட்டையுடன் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • 29.11.2020 அன்று பொதுமக்கள், பக்தர்கள் கோவிலில் உள்ளே சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
  • இந்நிகழச்சிகள் தொலைகாட்சி, யூடியூப், திருக்கோயில் இணையத்தளம், அரசு கேபிள் தொலைகாட்சி மற்றும் உள்ளூர் தொலைகாட்சிகள் மூலம் ஒளிப்பரப்பாகும்.
  • தீபத் திருநாளன்று அண்ணாமலையார் மலை மீது ஏறி மகாதீபத்தினை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
  • தீபத் திருவிழா நாட்கள் மற்றும் அதனை தொடர்ந்து வரப்போகும் பௌர்ணமி நாளன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை.
  • கிரிவலப் பாதை மற்றும் நகரப் பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தடை.
  • இந்த வருட தீபத் திருநாளன்று 28.11.2020 முதல் 30.11.2020 வரை சிறப்பு பேருந்துகள் வசதி கிடையாது.
  • திருவண்ணாமலை நகரம், செங்கம் ரோடு கிரிவலப்பாதை, அரசினர் கலைக்கல்லூரி அருகே அரச புறப்போக்கு காலு மைதானத்தில் நடைபெறும் மாடு மற்றும் குதிரை சந்தை இந்த ஆண்டு நடத்த அனுமதி கிடையாது.